comedyல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துவரும் "சிட்டிசன்' மணி, இயக்குநர் அவதாரம் எடுத்திருக் கிறார். ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கும் இப்படத்திற்கு "பெருநாளி' என்னும் தலைப்பு வைக்கப் பட்டுள்ளது. 30 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டி ருக்கும் "சிட்டிசன்' மணி, 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார்.

Advertisment

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருப்பவர், வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ஜெயம் என்னும் புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார்.

கிரேன் மனோகர், சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும் நடிக்கிறார்கள்.

விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது "பெருநாளி'.